அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி!

 அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவான திரைப்படம் தான் “வணங்கான்”. படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சில பல காரணங்களால் இப்படத்திலிருந்து பாதியில் வெளியேறினார் நடிகர் சூர்யா.

இந்நிலையில், வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண்விஜய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிகை ரோஷ்னி பிரகாஷ் நடிக்கவுள்ளாராம். இவர் இதற்கு முன்பு ஜடா, 47 டேய்ஸ், லக்கி மேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post