புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி!?

 புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி!?

அல்லு அர்ஜுன், பஹத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “புஷ்பா”.

பல மொழிகளில் இப்படம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில் மற்றும் ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும், இப்படத்தில் சாய்பல்லவி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருமுக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post