சர்தார் 2 விரைவில் எடுக்கப்படும் – வெற்றி விழாவில் கார்த்தி பேச்சு!!

 சர்தார் 2 விரைவில் எடுக்கப்படும் – வெற்றி விழாவில் கார்த்தி பேச்சு!!

“சர்தார்“ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிறது, என உற்சாகமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கார்த்தி.

கார்த்தி நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன. சர்தாரின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, சர்தார் பட வெற்றிவிழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான விருமன் படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் நீண்ட வருட கனவு திரைப்படமாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை பாத்திரமான வந்தியதேவன் பாத்திரத்தில், அப்படியே ராஜா காலத்து ஒற்றனாக மக்களின் மனம் கவர்ந்தார். இதைத்தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டமாக வெளியான சர்தார் படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுள்ளார்.

மாறுபட்ட கதைக்களம், விதவிதமான கதாப்பாத்திரம் என ஒவ்வொரு படத்திலும் அசத்தி வருகிறார் கார்த்தி.

தனக்கென தனியொரு இடத்தை பிடித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியான சர்தார் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, எட்டுத்திக்கும் ‘சர்தார்’ பேச்சாகவே இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார் கார்த்தி.

அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பையடுத்து ரசிகர்கள் இச்செய்தியினை கொண்டாடி வருகின்றனர்.

விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன்,
டைரக்டர் பி.எஸ்.மித்ரன்,
ரெட் ஜயண்ட் செண்பக மூர்த்தி,
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்,
எடிட்டர் ரூபன்,
கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன்,
சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page