கொண்டாடப்படும் “ஜெயிலர்”!; ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிவராஜ்குமார்!

 கொண்டாடப்படும் “ஜெயிலர்”!; ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிவராஜ்குமார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த வியாழக்கிழமை வெளியான திரைப்படம் தான் “ஜெயிலர்”.

மக்களால் அமோகமாக கொண்டாடப்பட்டு வருகிறது இப்படம். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

அனைவரும் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருந்த நிலையில், கர்நாடகாவில் சிவராஜ்குமாரின் காட்சிகளுக்கு அங்குள்ள ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர்.,

இதனால், அங்கு மிகப்பெரும் அளவில் வசூலை வாரிக் குவித்து வருகிறது ஜெயிலர் திரைப்படம்.

இதற்காக ரசிகர்களுக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், ரஜினிகாந்திற்கும், இயக்குனர் நெல்சனுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார் சிவராஜ்குமார்.

 

Related post