பத்து தல ரிலீஸ் தேதி அறிவிப்பு… மாஸ் காட்டிய சிம்பு ரசிகர்கள்!
என் கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் கெளதம் கார்த்திக் நடித்து வரும் படம் தான் “பத்து தல”.
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.
ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களில் படத்தின் மீது தொடர்ந்து சிக்கல்கள் எழும்ப, ஒரு வழியாக பேச்சுவார்த்தையின் மூலம் சரிசெய்யப்பட்டு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது.
இந்நிலையில், டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி “பத்து தல” திரைப்படம் வெளிவரும் என அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் இந்த செய்தியை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.