சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் இதுதானாம்.? இணையத்தில் வைரலான போஸ்டர்!

 சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் இதுதானாம்.? இணையத்தில் வைரலான போஸ்டர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக வேலை செய்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

SK 21 படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார், கமல்ஹாசன் தயாரிக்கிறார், நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி தான்.

தற்போது இப்படத்தின் தலைப்பு இது தான் என தகவல் கசிந்துள்ளது. இப்படத்திற்கு மாவீரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஆர்மி மேனாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1986ல் ரஜினி நடிப்பில் வெளியான மாவீரன் படத்தின் டைட்டிலையே இப்படத்திற்கும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இன்னும் ஒருசில தினங்களில் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related post