வேகம் காட்டும் சூர்யா… ரேஸில் “கங்குவா”!!

 வேகம் காட்டும் சூர்யா… ரேஸில் “கங்குவா”!!

யக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”.

சுமார் 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது.

பல மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு ஷெட்யூல் ஷெட்யூலாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க சூர்யா வேகம் எடுத்திருக்கிறாராம்.

ஒரே கட்டமாக சுமார் 50 நாட்கள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்த சூர்யா படக்குழுவினரிடம் கூறியுள்ளாராம்.

இதற்காக கொடைக்கானலில் படக்குழுவினர் அனைவரும் முகாமிட்டுள்ளனர்.

விரைவில் சூர்யா, கொடைக்கானல் செல்லவிருக்கிறார். இப்படத்தினை முடித்ததும் உடனடியாக வாடிவாசல் படத்தினை தொடங்க முடிவெடுத்திருக்கிறார் சூர்யா…

Related post