விஜய், சூர்யா, தனுஷ் .. முக்கிய அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

 விஜய், சூர்யா, தனுஷ் .. முக்கிய அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

யக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

இந்நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் தனுஷ் படங்களின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதில், ”விடுதலை பாகம் 2 படத்தின் படப்பிடிப்பும் முடிந்தவுடன் சூர்யாவுடனான வாடிவாசல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறோம்.

வாடிவாசல் படத்தினை முடித்ததும் தனுஷின் வட சென்னை பார்ட் 2 படத்தினையும் தொடங்க இருக்கிறேன்.

தளபதி விஜய் சார் எப்பவேணாலும் ரெடியா இருக்காரு… என்னோட கமிட்மெண்ட் எல்லாம் முடித்த பிறகு விஜய்யுடனான படத்தினை இயக்குவேன்.. ” என்று கூறியுள்ளார்.

Related post