2 வாரத்தில் டைட்டில், மே மாதம் டீசர்… “சூர்யா 42” அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

 2 வாரத்தில் டைட்டில், மே மாதம் டீசர்… “சூர்யா 42” அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது ”சூர்யா 42”.

வரலாற்று பின்னணி கொண்ட படமாக உருவாகும் இப்படம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறும் கதையாக உருவாகி வரும் நிலையில், வெண்காட்டார், முக்காட்டார், அரத்தர், மண்டாங்கர், பெருமனத்தார் உள்ளிட்ட 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கான பிஸினஸ் பல கோடிகளில் நடைபெற்று வருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் இரண்டு வாரத்தில் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்றும், மே மாதம் படத்தின் டீசர் வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்..

Related post