Tags : RIP

News Tamil News

பரியேறும் பெருமாள் நடிகர் திடீர் மரணம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இத்திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நாட்டுப்புற கலைஞர் நெல்லை தங்கராஜ். இவர், இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.  Read More

News Tamil News

நடிகரும் இயக்குனருமான ஈ ராமதாஸ் காலமானார்

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஈ ராமதாஸ், தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதை எழுதினார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் இருந்து வந்தார் ஈ ராமதாஸ். பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்து பெயர் பெற்றவர் ஈ ராமதாஸ். விழுப்புரத்தை பூர்வீகமாக கொண்ட ராமதாஸ் சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என சென்னைக்கு வந்தவர். நேற்று இரவு மாரடைப்பு காரணமாக ராமதாஸ் உயிரிழந்ததாக அவரது மகன் கலைச்செல்வன் […]Read More

News Tamil News

உடல் நலக்குறைவால் காலமான பிரபல நடிகர்!

வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45′ மணிக்கு உடல்நிலை குறைவால் காலமானார். மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 50. இவர் […]Read More

திடீர் என்று மரணம் அடைந்த “வெண்ணிலா கபடி

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தில் நடித்த ஒருவர் தான் ஹரி வைரவன். தனது உருவத்தால் முடியாது ஒன்றுமில்லை என்று அப்படத்தின் வாயிலாக கூறியிருப்பார். இந்நிலையில், சில வருடங்களாக அறியவகை நோய் ஒன்றால் பாதிகப்பட்ட அவர், இன்று 03.12.2022 காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். மதுரை மாவட்டம் கடச்ச நேந்தல் சொந்த ஊரில் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது அவருக்கு […]Read More

News Tamil News

நடிகரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா உயிரிழப்பு!

தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகராக இருத்தவர் கிருஷ்ணா. சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையாவார். தெலுங்கு முன்னணி நடிகராக இருந்து வந்தார். இதற்கிடையே சில வருடங்களாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் நடிகர் கிருஷ்ணாவிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று நடிகர் கிருஷ்ணா […]Read More

News Tamil News

ஹாரிபாட்டர் பட நடிகர் திடீர் மரணம்; வருத்தத்தில்

பிரபல ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தில் நடித்த நடிகர் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். இவரது மரணம் அனைவரையும் சோகத்தில் மூழ்க செய்துள்ளது. பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராபி கோல்ட்ரேன் (வயது 72). இவர் தி வேர்ல்ட் இஸ் நாட் இனஃப், ஹாரிபாட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் குழந்தைகள் மட்டுமல்லாது பல ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், […]Read More

News Tamil News

பென்சில் பட இயக்குனர் மணி நாகராஜ் திடீர்

ஜீ வி பிரகாஷ் மற்றும் ஸ்ரீ திவ்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “பென்சில்”. இப்படத்தினை இயக்கியிருந்தார் மணி நாகராஜ். இவர் தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். சில தினங்களுக்கு முன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இணையத்தில் பெரும் வைரலாகவும் பரவி வந்தது. இந்நிலையில், இயக்குனர் மணி நாகராஜுக்கு நேற்று (ஆக.25) சென்னையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். இச்செய்தி திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் […]Read More