அதிரி புதிரி வெற்றியில் “பதான்”

 அதிரி புதிரி வெற்றியில் “பதான்”

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்க உருவாகி நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பதான்.

இப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்திருக்கின்றனர். படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

கிடைத்த அமோக வரவேற்பால் நேற்று வெளியிட்ட திரையரங்குகளின் எண்ணிக்கையை விட, இன்றைய தினம் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

பல வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கான் மீண்டும் திரையில் அதிரி புதிரியான ஆக்‌ஷன் சரவெடியை கொடுத்திருப்பதால் ரசிகர்கள் படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

 

Related post