இணையத்தை வைரலாக்கிய “தளபதி 66” படக்குழு.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது தளபதியின் 66 வது திரைப்படம். இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படாததால் “தளபதி 66” என அழைக்கப்பட்டு வருகிறது.
படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க குடும்பங்களை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வம்சி.
இந்நிலையில், படத்தின் முதலாவது ஷெட்யூலை முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்காக ஒரு புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தளபதி விஜய் மற்றும் இயக்குனர் பேசிக் கொண்டிருப்பது போன்ற அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கடைசி கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் நடைபெறும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.