வெற்றிமாறனின் “விடுதலை” ப்ளான்; இது வேறமாரி இருக்குமே!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்க உருவாகி வரும் படம் தான் “விடுதலை”. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் நீளம் அதிகமாக வருகிறது என்பதன் காரணமாக, விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் வெற்றிமாறன்.
முதல் பாகம் வெளிவந்த அடுத்த மூன்று மாதத்தில் இரண்டாம் பாகத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம். இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.