தளபதி 68 படத்தை இயக்கப்போவது இவரா.? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

 தளபதி 68 படத்தை இயக்கப்போவது இவரா.? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது தனது வீட்டில் ஓய்வில் இருக்கிறார் விஜய்.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ் என்பது ஏறக்குறைய முடிவான நிலையில், தளதியின் 68வது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழத் துவங்கியிருக்கிறது.

இச்சூழலில், தளபதி விஜய்யை அவரது அலுவலகத்தில் சிறுத்தை சிவா சந்தித்திருக்கிறார். விஸ்வாசம் படத்திற்குப் பிறகு ஒரு கமர்ஷியல் கதை ரெடி செய்து வருமாறு விஜய் சிவாவிடம் குறியிருக்கிறார். அக்கதை ரெடியானதும் தற்போது விஜய்யை சந்தித்து கதையை கூறியிருக்கிறாராம். அநேகமாக, விஜய்யின் 68வது படத்தை இயக்கப் போவது சிவா தான் என்று தகவல் கசிந்துள்ளது.

என்னதான், விஜய், அஜித் இருவரும் நண்பர்கள் ஆனாலும், இணையத்தில் இவர்களது ரசிகர்கள் இட்டுக் கொள்ளும் சண்டைக்கு முடிவென்பதே கிடையாது. அஜித்தோடு சுமார் 3 படங்கள் ஒன்றாக இணைந்த பணிபுரிந்த சிறுத்தை சிவாவை தளபதி விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்திருக்கின்றனர். தற்போது தளபதி விஜய் படத்தை சிவா இயக்கவிருப்பது விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.

Related post