சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்னு விஜய் கேட்டதில்லை.. அப்புறம் ஏன்.? – ராகவா லாரன்ஸ்!

 சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்னு விஜய் கேட்டதில்லை.. அப்புறம் ஏன்.? – ராகவா லாரன்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். பி வாசுவே இப்படத்தினையும் இயக்கியிருக்கிறார்.

வரும் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடைபெற்ற சந்திரம்கி 2 விழாவில் பேசிஅய் ராகவா லாரன்ஸ், “ சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஏன் இவ்வளவு சர்ச்சை. சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டும் என்று விஜய் எப்போதாவது.. யாரிடமாவது.. கேட்டிருக்கிறாரா? அல்லது அவர் எங்காவது அறிவித்தாரா? எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று.

நான் எப்போது விஜய்யை சந்தித்தாலும், அவர் என்னிடம் தலைவர் நன்றாக இருக்கிறாரா? என்று தான் முதலில் கேட்பார். அதனால் விஜய்க்கு ரஜினி சார் மீது மரியாதை இருக்கிறது.

சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் போது, ‘பீஸ்ட் படம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. படம் சூப்பராக இருக்கிறது. வசூல் நன்றாக இருக்கிறது. சன் டிவியிலிருந்து சொன்னார்கள் என்று சொல்வார்.

அதனால் இந்த இருவருக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. நடுவில் இருப்பவர்கள் செய்யும் வேலையால் தான் இந்த பிரச்சனை வருகிறது. ” என்று கூறினார்.

 

Related post