பொங்கலுக்கு வருகிறது வாரிசு; போஸ்டரை வெளியிட்டு உறுதிபடுத்திய படக்குழு

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் வாரிசு. இப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார்.
இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்று பரவலாக தகவல் வெளியாகியுள்ளது… ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்பது பின்பு தான் தெரிய வரும்.
இந்நிலையில், பொங்கலுக்கு நிச்சயம் நாங்கள் வருகிறோம் என்று கூறுவதற்காக படக்குழு இன்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், விஜய் கார் மீது சாய்ந்திருக்க, பொங்கல் ரிலீஸ் என்று கூறப்பட்டுள்ளது.