30 வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி… ”விக்ரம்” படத்தில் ஏஜெண்ட் “டீனா” கதாபாத்திரத்தில் நடித்த்வர் இவர் தான்!

 30 வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி… ”விக்ரம்” படத்தில் ஏஜெண்ட் “டீனா” கதாபாத்திரத்தில் நடித்த்வர் இவர் தான்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “விக்ரம்”.

இப்படம் பெரிதான விமர்சனங்களை பெற்று நல்ல ஒரு வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில், தோன்றிய டீனா என்ற வேலைக்கார பெண்ணின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது.

இவரது பெயர் வசந்தி. சுமார் 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

தினேஷ் மாஸ்டரிடம் பத்து வருடங்களாக துணை நடன இயக்குனராக வேலை பார்த்து வருகிறார் வசந்தி. விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தினேஷ் மாஸ்டர் வாயிலாகத் தான் கிடைத்திருக்கிறது.

16 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்திருக்கிறார் வசந்தி. அதில் 6 நாட்கள் ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டுமே நடித்திருந்துள்ளார்.

30 வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இந்த விக்ரம் என வசந்தி மகிழ்ச்சி பொங்க கூறியிருக்கிறார்.

 

Related post