யாரும் பார்க்காத காட்சிகளுடன் ஓடிடி’யில் வெளியாகிறது “விடுதலை”!

 யாரும் பார்க்காத காட்சிகளுடன் ஓடிடி’யில் வெளியாகிறது “விடுதலை”!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படம் தான் “விடுதலை பாகம் 1”.

இப்படம், இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் வெளியான போது நிறைய சென்சார் கட் செய்யப்பட்டது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாவதால் ஒரிஜினல் காட்சிகளோடும் சென்சார் கட் செய்யப்படாத காட்சிகளுடனும் வெளியாக இருக்கிறது.

இந்த வெர்ஷனை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று வெளியாக இருக்கிறது “விடுதலை பாகம் 1”

 

Related post