விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை தயாரிக்கும் கமல்!?

 விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை தயாரிக்கும் கமல்!?

லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

ஆனால், இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே போனது. விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

 

Related post