ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்!?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அந்த படம் தற்போது உள்ளது. கையோடு மகள் இயக்கும் லால் சலாம் படத்திலும் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார்.
இந்த படத்தினை முடித்ததும் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.
ஜூலை மாதத்தில் இதன் படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள். மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.