36 வருட தவம்; நெகிழ்ச்சியில் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

 36 வருட தவம்; நெகிழ்ச்சியில் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

ராஜ் கமல் நிறுவனம் சார்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது “விக்ரம்”. இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படத்தினை பார்த்த கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதை ட்விட்டர் பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ”36 வருட தவம் எனக்கு, என்னுள் இருக்கும் இயக்குனரை என் உலக நாயகன் பாராட்ட” என்று தெரிவித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Related post