பி வாசு – ராகவா லாரண்ஸ் – வடிவேலு கூட்டணியில் “சந்திரமுகி 2”; அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்!

 பி வாசு – ராகவா லாரண்ஸ் – வடிவேலு கூட்டணியில் “சந்திரமுகி 2”; அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க பி வாசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “சந்திரமுகி”. இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றதால், இதன் அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் பி வாசு.

இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post