தனது மகனுக்காக லைகாவிடம் பேசிய சங்கீதா விஜய்!!
நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய், லைகா தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில், ஹீரோவாக கவின் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறார் சஞ்சய்.
சஞ்சய் இயக்குனராக ஆக வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர், மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனம் தான் தன் மகனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணிய சங்கீதா, தொடர்ந்து லைகா நிறுவனத்திடம் பேசி இந்த வாய்ப்பை மகனுக்காக பெற்று தந்திருந்திருக்கிறார் சங்கீதா.