தளபதி 67ல் நடிக்க மறுத்த கார்த்திக்… காரணம் இதுதான்!?

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக்கை படக்குழு அணுகி இருக்கிறார்கள்.
ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் அவரது சில மாதங்களுக்கு முன்பு மூட்டு வலி பிரச்சனையால் சிகிச்சை எடுத்து வருகிறார். இன்னமும் சரியாகாத காரணத்தால், விஜய் பட வாய்ப்பை அவர் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.