நிவின் பாலி படம் மூலம் மலையாள உலகிற்கு சென்ற அனிருத்!
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்க் இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இவர் இசையமைக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வரிசையாக பல கோடிகளுக்கு கல்லா கட்டி வருகிறது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இந்நிலையில், நிவின் பாலி நடிக்கும் மலையாள படம் ஒன்றிற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார் அனிருத்.
இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் அனிருத். இயக்குன ஹனீப் அதேனி இப்படத்தை இயக்கவிருக்கிறார்.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.