சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை தட்டிச் சென்ற பிரதீப்!

 சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை தட்டிச் சென்ற பிரதீப்!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து உருவான திரைப்படம் தான் “லவ் டுடே”. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், மிகப்பெரும் வசூலை வாரிக் குவித்தது.

நிகழ்கால கிட்ஸ்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி இருந்ததால், படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார். இந்த விருதினை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது கையால் பிரதீப்பிற்கு கொடுத்தார்.

இது தனக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இயக்குனர் பிரதீப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Related post