ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம்!

 ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வருகிறது “ஜெயிலர்”. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், வரும் வெள்ளியன்று இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

தற்போது ஜெயிலர் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும் .

இதனிடையே, படத்தின் ரன்னிங் டைம் விவரமும் வெளிவந்து இருக்கிறது. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் இருக்கும். அதில் முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post