20 நாட்களில் 70 கோடி.. ”லவ் டுடே”வால் பிரதிப் ரங்கநாதனுக்கு அடித்த ஜாக்பாட்!

 20 நாட்களில் 70 கோடி.. ”லவ் டுடே”வால் பிரதிப் ரங்கநாதனுக்கு அடித்த ஜாக்பாட்!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் லவ் டுடே. 20 நாட்களுக்கு முன் வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நிகழ்கால காதலையும் மோதலையும் கண்முன்னே கொண்டுவந்து இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருந்தார் இயக்குனர் பிரதீப்.

படம் வெளியாகி 20 நாட்கள் முடிவடைந்த நிலையில், இதுவரை திரையரங்குகளில் மட்டுமே சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக்குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9 முதல் 10 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம், இதுவரை 70 கோடி வரை வசூலை வாரிக்குவித்திருப்பது விநியோகஸ்தரர்களிடையேயும் திரையரங்கு உரிமையாளர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை ஏ ஜி எஸ் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் இப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post