அப்டேட் ரெடி; “தளபதி 67” குறித்து இயக்குனர் லோகேஷ்

 அப்டேட் ரெடி; “தளபதி 67” குறித்து இயக்குனர் லோகேஷ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது “தளபதி 67”. படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் கொடுத்த வெற்றியால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது தளபதி 67.

படத்தின் அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாத நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று அறிவிப்பு ஒன்றை கூறினார்.

பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தளபதி 67 படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியே வரும் என அறிவித்தார்.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Related post