Tags : shooting

News Tamil News

தனுஷ் படத்தின் படப்பிடிப்பால் திருப்பதியில் போக்குவரத்து நெரிசல்!

தனுஷ் தற்போது தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதி அருகே நடந்து வருகிறது. இதனையொட்டி, திருமலைஅலிபிரி அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதனால் திருமலை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். போக்குவரத்தை மாற்ற போலீசாருடன் ஏராளமான பவுன்சர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.. குறுகலான ஹரே ராம ஹரே கிருஷ்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால்.. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  Read More

News Tamil News

படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்ட ரஜினி & கமல்

ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றும் வரும் அதே இடத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதனால், இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டு கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்டதால் இருவரும் சிரித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த […]Read More

News Tamil News

குண்டு வெடிப்பு; நிறுத்தப்பட்ட “கேப்டன் மில்லர்” படப்பிடிப்பு!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். மேலும், நிவேதிதா, சுமேஷ் மூர், சிவராஜ் குமார், ஜான் கொக்கன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்., படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மிகப்பெரும் செட் அமைத்து நடத்தி வருகிறது படக்குழு. சில மாதங்களாகவே அப்பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், […]Read More

News Tamil News

சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி.. 2 வருட

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நேர்த்தியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை சாய்பல்லவி. தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கும் சாய் பல்லவி, கதைகளைக் கேட்க நேரம் ஒதுக்க முடியாமல், தன் இமெயில் முகவரிக்கு அனுப்பச் சொல்றார். அப்படி வரும் கதைகள் அனைத்தையும் படித்து, அந்தந்த இயக்குனர்களுக்கு பதிலுரையும் கொடுக்கிறார். சில கதைகளை அவர் செய்ய முடியாத நிலையிலும்கூட, எழுதியவர்களைத் தொடர்புகொண்டு பாராட்டி, படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சிபாரிசும் செய்து வருவதை […]Read More

News Tamil News

அருண்விஜய்க்கு காயம்.. கேரளாவில் சிகிச்சை

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் அச்சம் என்பது இல்லையே. இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எமி ஜாக்சன் இப்படத்தில் நடித்து வருகிறது. படத்தின் சண்டைக் காட்சிகளில் எதிர்பாராதவிதமாக அருண்விஜய்யின் காலில் தசைநார் கிழிந்துவிட்டது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியபோது, வலியை தாங்கிக் கொண்டு படப்பிடிப்பினை முடித்துக் கொடுத்து விட்டு கேரளா சென்றார். அங்கு ஆயூர்வேத முறையில் தற்போது சிகிச்சை பெற்று […]Read More

News Tamil News

வதந்திகளை நம்பாதீங்க.. விளக்கம் கொடுத்த “மாவீரன்” படக்குழு!

மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வரும் படம் தான் “மாவீரன்”. இப்படத்தின் டைட்டில் வீடியோ மிகப்பெரும் அளவில் அனைவராலும் பெரிதும் கவரப்பட்டது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது மடோன் அஸ்வினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் ஷீட்டிங் நிறுத்தப்பட்டதாவும் தகவல் வெளியானது, அதனைத் தொடர்ந்து சமாதானம் நடத்தப்பட்டு ஷூட்டிங் தொடங்கிய நிலையில், மறுபடியும் டைரக்டருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்துமோதல் ஏற்பட்டதாகவும், இதனால் நிறைய சீன்களை மீண்டும் […]Read More

News Tamil News

தங்கலான் படத்திற்காக விக்ரம்….

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்க உருவாகி வருகிறது தங்கலான்., படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படத்தில் நடிக்கும் விக்ரம் தனது தோற்றத்திற்காக நாள்தோறும் 4 மணி நேரம் செலவழித்து வருவதாகவும் படக்குழுவினர் கூறியிருக்கின்றனர். விக்ரமின் இந்த ஓயாத உழைப்பு தான் அவரை இந்த இடத்தில் இருக்க […]Read More

News Tamil News

தொடங்கியது “தளபதி 67” ?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதே நாளில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. துணிவு பட ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்றோ அல்லது நாளையோ வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய், வாரிசு படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில்நடிக்கவிருக்கிறார். அதற்கான பூஜை […]Read More

News Tamil News

விடுதலை படப்பிடிப்பை முடித்த வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் விடுதலை. ர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார். படத்தின் நீளம் கருதி, படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க ஆரம்பித்தார் வெற்றிமாறன். இதற்காக பல மாதங்கள் எடுத்துக்கொண்டார். ஒருவழியாக தற்போதுஇந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை படக்குழுவினர் அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். […]Read More

News Tamil News

ஒரு வழியாக நிறைவடைந்த “பத்து தல” படப்பிடிப்பு!!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் பத்து தல. படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாளில் இருந்து பல முறை படத்தின் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் இருந்துகொண்டே வந்தது. பலமுறை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது என்றெல்லாம் செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று சிம்புவின் ரசிகர்களும் பெருமூச்சு விடுகின்றனர். இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் […]Read More