அபாய கட்டத்தை தாண்டிய டி ராஜேந்தர்…கதறி அழுத சிம்பு.. நடந்தது என்ன.?

தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முக கலைகளை கொண்டு தமிழ் சினிமாவில் முக்கிய நபராக இருந்து வருபவர் டி ராஜேந்தர். சில தினங்களுக்கு முன் கடுமையான உடல் நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இவர் அட்மிட் ஆகியிருந்தார். சுமார் 4 நாட்கள் தீவிரமான சிகிச்சை அளித்தம் மருத்துவர்கள் தற்போது அவர் சீராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அபாயக்கட்டத்தை தாண்டி விட்டார் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். தந்தையின் உடல் நிலையைக் கண்டு சிம்பு கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறாராம்.
சமீபத்தில் டி. ராஜேந்தர் வீட்டு முன்பு சிம்புவை திருமணம் செய்துக் கொள்ள நடு இரவில் வந்து போராட்டம் நடத்திய ஸ்ரீநிதி என்ற டி.வி. நடிகையால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் டி ராஜேந்தரின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும், சிம்புவிற்கும் நிதி அகர்வாலுக்கும் இடையே இருந்த காதல், கல்யாணம் வரை சென்றதும் அதுவும் டி ராஜேந்தரின் மன உளைச்சலுக்கு காரணம் என்கிறார்கள்.
பூரண நலம் பெற மேல் சிகிச்சைக்காக டி ராஜேந்தரின் மகனான நடிகர் சிம்பு அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்லமுடிவு செய்துள்ளாராம்.