சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு!?

 சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு!?

மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் படமாக கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் சிம்பு.

தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

KGF படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிம்பு நடிக்க சுதா கொங்காரா இயக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முற்றிலும் மாறுபட்ட கூட்டணியில் உருவாகும் இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

Related post