காஷ்மீர் செல்லும் சிவகார்த்திகேயன்!?

 காஷ்மீர் செல்லும் சிவகார்த்திகேயன்!?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதீதி சங்கர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ரங்கூன் படத்தினை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். இந்த படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட பணியில் இருக்கும் இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்கப்படவிருக்கிறது.

முதல்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் தொடங்க திட்டமிட்டிருக்கிறது படக்குழு. இதற்காக சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் அனைவரும் காஷ்மீர் செல்லவிருக்கின்றனர்.

ஏற்கனவே விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தான் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related post