தொடங்கியது “தளபதி 67” ?

 தொடங்கியது “தளபதி 67” ?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அதே நாளில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. துணிவு பட ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்றோ அல்லது நாளையோ வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய், வாரிசு படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில்நடிக்கவிருக்கிறார். அதற்கான பூஜை சில தினங்களுக்கு முன்பே போடப்பட்டது.

இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று தான் முதல் நாள்படப்பிடிப்பை துவக்கியிருக்கிறாராம் லோகேஷ். தொடர்ந்து பத்து நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம்..

சுமார் 6 மாதங்கள் படப்பிடிப்பு மட்டுமே எடுக்க வேண்டியுள்ளதால், இந்த வருடத்தின் மே மாதம் வரை படப்பிடிப்பு செல்லும் என்கிறாரகள்.

 

Related post