தளபதி 67 ப்ரொமோ பயங்கரமா இருக்கும்… அப்டேட் கொடுத்த நடிகர்!

 தளபதி 67 ப்ரொமோ பயங்கரமா இருக்கும்… அப்டேட் கொடுத்த நடிகர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது விஜய்யின் 67வது படம்.

இத்திரைப்படத்தின் ப்ரொமோ வீடியோ வரும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மைக்கேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது பிரபல நடிகர் சந்தீப் கிஷன் தளபதி 67 படம் குறித்து சொன்ன அப்டேட் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது தளபதி 67 ப்ரோமோ பயங்கரமாக இருக்கும் என்று சந்தீப் கிஷன் கூறியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகரித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜும் நடிகர் சந்தீப் கிஷனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post