பிப்.2,3,4ல் சினிமா ரசிகர்களுக்கு விருந்து!

 பிப்.2,3,4ல் சினிமா ரசிகர்களுக்கு விருந்து!

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பத்து தல. இப்படத்தின் முதல் சிங்கிள் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

சிம்பு பிப்ரவரி 3ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அதற்காக 2 ஆம் தேதி பத்து தல படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் ப்ரொமோ வீடியோ வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 4ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வாத்தி படத்தினை இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.

தொடர்ந்து மூன்று நாட்களும் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்து இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

 

Related post