நிறைவடைந்தது “லியோ”; மகிழ்ச்சியில் படக்குழு!!

 நிறைவடைந்தது “லியோ”; மகிழ்ச்சியில் படக்குழு!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. காஷ்மீர் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலாக முடித்து சென்னை திரும்பியது படக்குழு.

சில தினங்களுக்கு முன்பு, விஜய் தனக்கான போர்ஷனை முடிவு செய்தார். இந்நிலையில், இன்று லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சுமார் 125 நாட்கள் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றிருக்கிறது. எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்திற்கு அதிகப்படியான செக்யூரிட்டிகள் செய்யப்பட்டதால், படம் பற்றிய எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை.

லலித் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post