பொங்கலுக்கு நான் தான் – அஜித் விடாப்பிடி

 பொங்கலுக்கு நான் தான் – அஜித் விடாப்பிடி

வாரிசு படத்துடன் துணிவு படம் மோதவிருக்கும் நிலையில் மாஸ் ஸ்டில்ஸ் மற்றும் “சில்லா சில்லா” பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்து அஜித் ரசிகர்களின் ஏக்கத்திற்கு தீனி போட்டது “துணிவு” படக்குழு.

இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் AK 62 படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள நிலையில்.

AK 62 படத்தின் படப்பிடிப்பு, ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாம். மேலும் மே மாதத்திற்குள் படப்பிடிப்பு பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும். 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு AK 62 படம் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித்துடன் இனைந்து வேதாளம், விவேகம் படத்தின் மூலம் செம ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் தான் AK 62 படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அனிருத்-அஜித் கூட்டணியில் மீண்டும் படம் உருவாகவுள்ள செய்தியை அறிந்த AK ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Spread the love

Related post