நம்ம நண்பர் படம் தானே.. அதுவும் நல்லா போகட்டும் – துணிவு குறித்து விஜய்

 நம்ம நண்பர் படம் தானே.. அதுவும் நல்லா போகட்டும் – துணிவு குறித்து விஜய்

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “வாரிசு”. பொங்கல் விடுமுறையாக இப்படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அதே சமயம், ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் தான் “துணிவு”. இப்படமும் பொங்கல் விடுமுறையாக திரைக்கு வர உள்ளது.

வாரிசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ஷாம். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “தளபதியிடம் பொங்கலுக்கு துணிவு படமும் வெளிவர இருக்கிறது என்று சொன்ன போது, மகிழ்ச்சி பா, வரட்டும் பா. நம்ம நண்பர் படம் தானே… அதுவும் போகட்டும் நம்ம படமும் போகட்டும் என்று கூறினார். இதுதான் தளபதியை தளபதியாக எண்ண வைப்பது என்று கூறியுள்ளார் ஷாம்.

இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. தளபதி ரசிகர்கள் இதை பெரிதாக கொண்டாடி வருகின்றனர்.

 

Related post