”ஜெயிலர்” படத்தில் ரஜினிக்கு ஜோடி இவங்கதானாம்.!?

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கிறது “ஜெயிலர்”. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், இணையத்தில் பெரும் வைரலானது.
இந்நிலையில், இதன் படப்பிடிப்பை ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.
ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.