பிஸியாகும் நயன்தாரா; வரிசைகட்டும் படங்கள்!

 பிஸியாகும் நயன்தாரா; வரிசைகட்டும் படங்கள்!

நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்து மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணமான பின்பு சினிமாவை விட்டு விலகி இருந்த நயன்தாரா, தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காத்துவாக்குல இரண்டு படத்தினை தவிர, மற்ற படங்கள் சரிவர வரவேற்பைப் பெறவில்லை.

ஓ2, கனெக்ட், கோல்ட், காட் ஃபாதர் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில், ஜெயம்ரவியோடு ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான், இறைவன், திருச்சிற்றம்பலம் ஹிட் கொடுத்த மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், தனி ஒருவன் 2 என கைவசம் படங்களை வைத்து மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வரத் துவங்கி விட்டார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

 

Related post