“நா ரெடி தான்” பாடலுக்காக விஜய் மீது போலீஸில் புகார்.. பரபரப்பு!

 “நா ரெடி தான்” பாடலுக்காக விஜய் மீது போலீஸில் புகார்.. பரபரப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”.

படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

படக்குழுவினர், பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்காக “லியோ” படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டனர்.

பாடல் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து யூடியூபில் சாதனையும் படைத்து வருகிறது. இந்நிலையில், இப்பாடலானது போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

அதில், நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டப்பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Related post