முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த “தலைவர் 170”!

 முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த “தலைவர் 170”!

ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது “தலைவர் 170”. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

படத்தின் படப்பிடிப்பானது சில தினங்களுக்கு முன் பூஜையோடு திருவனந்தபுரத்தில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில், ரஜினிகாந்த், மஞ்சுவாரியர், ஜி எம் சுந்தார், விஜய் டிவி ரக்‌ஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பானது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் நடைபெறவிருக்கிறது.

பஹத் பாசில் மற்றும் ராணா டகுபதி இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post