தலைவர் 169; இளம் வயது ரஜினியாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!

 தலைவர் 169; இளம் வயது ரஜினியாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க விரைவில் உருவாக இருக்கிறது ”தலைவர் 169”. கடைசியாக நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஜினி, தனது ஆஸ்தான இயக்குனரான கே எஸ் ரவிக்குமாரை அழைத்து திரைக்கதையை எழுத வைத்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப் போல பரவினாலும், அதில் உண்மை இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம்.

இதில், இளம் வயது ரஜினியாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் திட்டமிட்டுள்ளாராம். அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் ஒரு பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதவிருக்கிறாராம்.

 

Related post