வசூலில் வலிமையை ஓரங்கட்டிய கே ஜி எஃப் 2.. கவலையில் அஜித் ரசிகர்கள்!

 வசூலில் வலிமையை ஓரங்கட்டிய கே ஜி எஃப் 2.. கவலையில் அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சில மாதங்களாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின. அந்த வரிசையில், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், வலிமை, பீஸ்ட் படங்கள் வெளியாகின.

இப்படங்கள் போதுமான அளவிற்கு மக்களிடையே வரவேற்பு பெறாததால் தோல்வி படங்களாக மாறின. இதில், பீஸ்ட் சற்று விதிவிலக்கு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டமில்லா ஒரு வசூலை கொடுத்திருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்த கே ஜி எஃப் 2 தமிழகத்தில் மிகப்பெரும் அளவில் கலெக்‌ஷன் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் டாப் 5 பாக்ஸ் ஆபீஸ் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

1.பீஸ்ட்

2.KGF 2

3. வலிமை

4. அண்ணாத்த

5. RRR

இதில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் வலிமை படத்தின் வசூல் சாதனை KGF 2 திரைப்படம் முந்தியுள்ளது என்பது தான்.. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று அப்செட் ஆகியுள்ளனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

Related post