உலக அளவில் ட்ரெண்ட் ஆன “பீஸ்ட்” க்ளைமாக்ஸ் காட்சி; காரணம் என்ன.?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், விஜய்யின் மார்க்கெட்டை வைத்து படத்தின் வசூல் பெரிதாக பாதிக்கப்படவில்லை.
இந்நிலையில், இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. காரணம் என்ன என விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல் இதுதான். சஜ்ஜன் என்பவர் இந்திய விமானப்படையில் கேப்டனாக இருக்கிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை வெளியிட்டு ”இதில் எனக்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
போர் விமானங்களை இயக்கும் விமானிகள் ஆக்சிஜன் மாஸ்க்கும், ஹெல்மெட்டும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஏனெனில் ஜெட் விமானம் செல்லும் வேகத்தில் நமக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். மேலும் காற்றின் வேகத்திலும், ஜெட்டின் ஒலியிலும் காது சவ்வுகள் கிழிந்து விடும். இதன் காரணமாகவே ஆக்சிஜன் மாஸ்க்கையும், ஹெல்மெட்டையும் விமானிகள் அணிந்திருப்பார்கள்.
ஆனால், குறிப்பிட்ட சீனில் விஜய் மாஸ்க்கும் அணிந்திருக்க மாட்டார். ஹெல்மெட்டையும் அணிந்திருக்க மாட்டார். நிஜத்தில் இது சாத்தியமே இல்லாதது.