கமல்ஹாசனின் விக்ரம்; உதயநிதி ட்விட்…

 கமல்ஹாசனின் விக்ரம்; உதயநிதி ட்விட்…

விக்ரம்; ஒட்டுமொத்த தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டும் காலி; உதயநிதி ட்விட்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்து வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான இத்திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

அதீத எதிர்பார்ப்புகளோடு வெளியான இத்திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. வசூலிலும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது விக்ரம்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்தது இப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் காரணம்.

இரண்டு வாரங்களாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் தமிழ் சினிமாவின் பல படங்களின் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை துவம்சம் செய்துள்ளது.

இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று “ விக்ரம் entering 3rd week will break all Tamil box office record!” என்று கூறியுள்ளார்.

 

 

Related post