10 நாட்களில் 300 கோடி; அதிரி புதிரி கலெக்ஷனில் “விக்ரம்”!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க மிகவும் பிரம்மாணட் வெளியீடாக வந்த படம் தான் “விக்ரம்”.
படம் வெளியான ஆரம்ப நாள் முதலே, படத்திற்கான விமர்சனம் பாஸிடிவாக இருந்ததால், கலெக்ஷனிலும் மிகப்பெரும் அளவில் சாதனையை நிகழ்த்தி வந்தது விக்ரம்.
தொடர்ந்து 10 நாட்களாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. பத்து நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 300 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கிறது. இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் விக்ரம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
இன்னமும் 400 திரையரங்குகளில் இப்படம் தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.