Tags : Rajinikanth

News Tamil News

ரஜினி நடிக்கும் படத்தில் யஷ்!?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தினை முடித்ததும் அவரின் 171வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளை லோகேஷ் துவங்கி விட்டார் என்கிறார்கள். இந்நிலையில், ரஜினி நடிக்கும் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ரசிகர்களை இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.  Read More

News Tamil News

தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன்!?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தனது மகள் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். வரும் ஜூலை மாதம் தொடங்கவிருக்கும் “தலைவர் 170” படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. […]Read More

News Tamil News

தமன்னாவிற்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த பரிசு!

நடிகை தமன்னா தற்போது சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் தமன்னா. படப்பிடிப்பு முடிவடையும் சமயத்தில் ரஜினிகாந்த் தமன்னாவிற்கு பரிசு ஒன்றை அளித்துள்ளார். அதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தமன்னா. “ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஒரு ஆன்மீக புத்தகத்தை கையெழுத்திட்டு தனக்கு வழங்கினார். அது தனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.  Read More

ஜெயிலரை முடித்து வைத்த முத்துவேல் பாண்டியன்!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்ததாக படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினரோடு ரஜினிகாந்த் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை […]Read More

News Tamil News

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் கதை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்க லியோ படத்தினை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தினை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

News Tamil News

களம் காண தயாராகும் ரஜினியின் “ஜெயிலர்”!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் ஜெயிலர். படத்தில் ரஜினிகாந்த் போர்ஷன் முடிவடைந்ததால், அவர் அடுத்து நடிக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் சிங்கிள் ஒன்றை வரும் ஜூன் மாதம் 2 ஆம் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். தயாரித்து வருகிறது சன் பிக்சஎஸ் நிறுவனம். மிகப்பெரும் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் பணிபுரிவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக […]Read More

News Tamil News

எத்தனை கோடி கொடுத்தாலும் ரஜினிக்கு வில்லனாக நடிக்க

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கவிருக்கிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதற்காக விக்ரமிற்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க லைகா நிறுவனம் ரெடியாக இருந்ததாம். ஆனால், இதை விக்ரம் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணமும் தங்கலான் திரைப்படம் தானாம். தங்கலான் படம் […]Read More

News Tamil News

ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்!?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அந்த படம் தற்போது உள்ளது. கையோடு மகள் இயக்கும் லால் சலாம் படத்திலும் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார். இந்த படத்தினை முடித்ததும் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். ஜூலை மாதத்தில் இதன் படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள். மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை […]Read More

News Tamil News

லால் சலாம் படத்தில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிறப்பு தோற்றமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே செல்வராகவனிடம் உதவியாளராக பணியாற்றியவர். செல்வராகவனிடம் உதவியாளராக இருந்தது, தற்போது லால் சலாம் படத்திற்கு பேருதவியாக இருக்கிறதாம் ஐஸ்வர்யாவிற்கு. லால்சலாம் படத்தின் திரைக்கதையில் செல்வராகவனின் பங்கு பெரும் பங்காம். 2013-ல் வெளிவந்த இந்தி Kai po […]Read More

News Tamil News

மும்பை தாதாவாக ரஜினி!?

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த படைப்பாக மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான படப்பிடிப்பு மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில், ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மும்பை தாதாவாக ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நேற்று முன் தினம் இணையத்தில் ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியாகி […]Read More