Tags : release date

News Tamil News

மீண்டும் தள்ளிச் சென்ற அருண் விஜய்யின் “பார்டர்”

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தான் “பார்டர்”. இப்படம் உருவாகி நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிச் சென்றது. இந்நிலையில், பார்டர் திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரிலீஸ் தள்ளிச் செல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அருண் விஜய்யுடன் ரெஜினா காசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி,எஸ் இசையமைத்துள்ளார். […]Read More

News Tamil News

லியோ வசூலுக்கு அணை போடுமா “பொன்னியின் செல்வன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இப்படம் ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா […]Read More

News Tamil News

6 நாட்களும் எங்க ராஜ்யம் தான்… “லியோ”

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “லியோ”. படத்தின் டைட்டிலை படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ப்ரொமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்ட படக்குழு ரசிகர்களுக்கு ஒரு விருந்தே படைத்து விட்டது. இந்நிலையில், படக்குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீர் பறந்து சென்றிருக்கிறது.. படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, தீபாவளி கொண்டாட்டமாக வெளிவரும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேலையில், அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி படம் […]Read More

News Tamil News

துணிவு படத்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய வாரிசு

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வைரலானது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. வாரிசு பொங்கல் வெளியீடாக 12ஆம் தேதி திரைக்கும் வரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. வாரிசு ட்ரெய்லர் வெளியான ஓரிரு மணித்துளிகளில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர்.. ஜனவரி 11 ஆம் […]Read More

News Tamil News

ரிலீஸ் தேதியை அறிவித்த “பத்து தல” படக்குழு!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்,, கெளதம் கார்த்திக் நடிக்க உருவாகி வந்த திரைப்படம் தான் “பத்து தல”. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தள்ளிச் சென்று கொண்டே இருந்தது.. இந்நிலையில் மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர். வரும் 2023 மார்ச் மாதம் 30 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் அறிவித்துள்ளது.  Read More

News Tamil News

மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் பத்து தல

சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனரான கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் என நட்சத்திரங்கள் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பத்து தல”. இப்படத்தின் படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பமாகி இருந்தாலும், தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து ஒரு வழியாக இப்படத்தின் படப்பிடிப்பினை முடித்திருக்கிறது படக்குழு. படம் இம்மாதம் வெளிவரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் இன்னும் முடிவடையாததால் பிப்ரவரி மாதம் வெளிவரும் என அறிவிப்பு வெளியானது. […]Read More

News Tamil News

பொங்கலுக்கு வருகிறது வாரிசு; போஸ்டரை வெளியிட்டு உறுதிபடுத்திய

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் வாரிசு. இப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்று பரவலாக தகவல் வெளியாகியுள்ளது… ஆனால், அது […]Read More

News Tamil News

பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிச் சென்ற தனுஷின் “வாத்தி”

நடிகர் தனுஷ் நடிக்க தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘வாத்தி’. நாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பாடலான வா வாத்தி என்ற பாடல் ஹிட் அடித்துள்ளது. வாத்தி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள […]Read More

News Tamil News

மிரள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!!

இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிரள்.. இந்த படத்தில் வாணி போஜன், கே எஸ் ரவிக்குமார் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சக்திவேல் பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியது.. இந்த நிலையில் நவம்பர் 11ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  Read More

News Tamil News

வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ரிலீஸ்

சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், படத்தின் மூலம் எண்ட்ரீ கொடுக்கவிருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு. இப்படத்தினைத் தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் லைகா தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய […]Read More